Vasan Ratnasingam 1
செய்திகள்இலங்கை

தொற்றிலிருந்து குணமடைந்த பின்பே தடுப்பூசி எடுக்கவேண்டும்!

Share

கொவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் 28 நாள்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து 14 நாள்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரோ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன, இந் நிலையில், கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அவைகுறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே வைத்திநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்படி தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்கள் அதிக நாட்டம் காண்பித்து வருகின்றார்கள்.

முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்குரிய காலப்பகுதியில் தொற்று ஏற்படும் பட்சத்திலும் மேற்குறிப்பிட்ட காலஅளவின் அடிப்படையிலேயே இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறவேண்டும்.

கொவிட் – 19 வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், பரிசோதனை மூலம் தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

அவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னர் மேற்கூறப்பட்டவாறான காலஅளவுகளின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெறமுடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...