கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
கம்பளை காவல்துறையினருக்கு குறித்த பகுதியில் உள்ள மக்கள் தகவல் உடலம் தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து, கம்பளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.