maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

எமது வாய்களுக்கு பூட்டு போட முயற்சி! – அரசை சாடுகிறார் மைத்திரி

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலமடைந்துவருகின்றது. கட்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் எமது வாய்களுக்கு பூட்டுபோட்டு, சாவியை மொட்டு கட்சி தலைமையகத்தில் வைப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

உண்மையை வெளிப்படையாக கதைப்போம். அநீதிகள் இடம்பெற்றால் அவற்றை சுட்டிக்காட்டுவோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...