TNA
செய்திகள்இலங்கை

கொழும்பில் களமிறங்கும் தமிழ்க் கூட்டமைப்பு!

Share

2022 மார்ச் மாதமளவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்பு கிளை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மேலும் சிலரும் கட்சி உயர்பீடத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் குதிப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், ஐக்கிய மக்கள் சார்பில் மலையக மற்றும் வடக்கு தமிழர் ஒருவர் போட்டியிட்டதால் அந்த முடிவை கூட்டமைப்பு மாற்றிக்கொண்டது.

அதேபோல மனோ கணேசனுடன் இருக்கும் இணக்கப்பாடு காரணமாகவும் கொழும்பில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கூட்டமைப்பு தொடர்ந்தும் பின்னடிப்பு செய்துவருகின்றது.

எனினும், இம்முறை அந்த முடிவில் மாற்றம் நிகழக்கூடும் எனவும், கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்கலாம் எனவும் கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...