e77a2485 d1eb 45fb b8f1 8476b19430a7
செய்திகள்இலங்கை

மாதா கோயிலில் திருடர்கள் கைவரிசை!- கரவெட்டியில் சம்பவம்!

Share

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு சி.சி.ரி.வி கமராவுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்துள்ளனர்.

ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஆலயப் பொருள்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.

அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பொருள்களின் விபரம் முழுமையாக தெரியவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது திருட்டு சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...