missing
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கசூரினா கடலில் நீராடியவர் மாயம்! – தேடுதல் பணி தீவிரம்

Share

யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனை தேடும் பணிகள் மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணாமல்போன இளைஞன் கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியிலிருந்து காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்ற 20 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கரைக்கு ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றொருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...