mano ganesan
செய்திகள்அரசியல்இலங்கை

சீனா கைவிட்டதை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க முன்வர வேண்டும்

Share

சீனாவால் இடைநிறுத்தப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பான செயற்றிட்டத்தை அதே வடக்கு தீவுகளில் முன்னெடுக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குபோதே இவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசு இலங்கை அரசுடன் இது சார்ந்து பேச வேண்டும். இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

சுத்தமான மின்சாரம் நம் நாட்டுக்கு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். சீனா இங்கு இடை நிறுத்திய திட்டத்துக்கு பதிலாக அதனை மாலைத்தீவில் 12 தீவுகளில் முன்னெடுக்க அந்நாட்டு அரசுடன் உடன்பட்டு விட்டது.

இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் இலங்கையில் பல மாதங்களுக்கு முன்னரே இடைநிறுத்தப்பட்டு விட்டது.

இத்தகவலை நம் நாட்டின் நிதி அமைச்சர் புது டில்லி சென்றிருக்கும் தருணத்தில் சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் வடக்கிலுள்ள தீவுகளில் இந்திய அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கி சிபாரிசு செய்யும் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...