1
செய்திகள்உலகம்

தீயில் கருகிய தமிழ் குடும்பம் -பரிதாபமாக 4 பேர் சாவு!!

Share

இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் .

இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோரே சாவடைந்துள்ளனர் .

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களது வீடு தீப்பற்றியதும், இளம் தாய், தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு, ‘நெருப்பு… நெருப்பு’ என கதறியுள்ளார்.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு சென்ற போதும் , வீட்டிலிருந்த 4 பேரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சாவடைந்த இளம் தாயின் சகோதரன், மேல் மாடியிலிருந்து குதித்து தப்பிய போது அவரின் கால்கள் உடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர்.

தனது மனைவி, 4,1 வயதுடைய பிள்ளைகள், மாமியாரை பறிகொடுத்த கணவன், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகளை பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

இச்சம்பவத்தல் அக்குடியிருப்பு சோகத்தில் மூழ்கியுள்ளது.

இக்குடும்பத்தினர் அந்த வீட்டை 3 மாதங்களின் முன்னர்தான் கொள்வனவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவடைந்த இளம் தாயின் தாயார் இன்று இலங்கைக்கு திரும்பவிருந்தா நிலையில் அவரது பயண பொதிகளை கட்டிக் கொண்டிருந்த போது, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாகவில்லை.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சாவடைந்தவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வெளியில் சோகத்தில் உறைந்துள்ளார்கள் அத்தோடு அந்த பகுதி மக்களும் அவ் வீட்டுக்கு முன் மலரஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...