DSC04078
செய்திகள்இலங்கை

இலங்கை இந்தியாவிடம் பிச்சை எடுக்கிறது – மாதகல் மீனவர்கள் கொந்தளிப்பு!!!!

Share

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாதகலில் ஆறு கடற்றொழில் சாமசங்கள் இணைந்து வீதிமறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண கடற்றொழில் சாமசங்களின் தலைவர் சுப்பிரமணியம் ,

வடபுலத்து மீனவர்கள் பலதரப்பட்ட முறையிலே ஏமாற்றப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே தங்களை மறந்து வீதிக்கு இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டங்களுக்கு வந்த கடற்றொழில் அமைச்சர் சில வாக்குறுதிகளை அழித்துச் சென்றார். ஆனால் அதன்பின் குறித்த வாக்குறுதிகள் பற்றி பேசவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை.

இன்று எங்களுடைய அரசாங்கமானது வடபுலத்தில் உள்ள மக்களை ஓரங்கட்டி அவர்களுடைய தொழில்களை நவீனமயப்படுத்த ஒரு மாற்று நாட்டு மக்கள் என்ற ரீதியில் புறந்தள்ளி இருக்கின்றார்கள். இதனால் சகல விதத்திலும் நம்பிக்கை இழந்த வடபுலத்து மீனவர்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பு தாக்கம் தீவிரம் அடைந்த நிலையில் வத்திராயனில் 2 மீனவர்களை பலி எடுத்திருக்கின்றது. இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வீதிவீதியாக இருந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இன்று மாதகலில் உள்ள ஆறு கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து இந்த மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றோம்.

எங்களுடைய அரசாங்கத்தின் கைகளில் ஒரு பாரிய சட்டம் இருக்கின்றது. வெளிநாட்டு மீனவர் ஒழுங்குபடுத்தல் பிரமாண சட்டம்.

இதனூடாக வெளிநாட்டு படகுகளை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் அல்லது அந்த படகுகளை பறிமுதல் செய்ய முடியும்.

அதனை வைத்துக் கொண்டு அரசாங்கம் இந்திய அரசிடம் ஒரு கூலியை பெற்றோ அல்லது ஒரு பிச்சை எடுத்துக்கொண்டு எங்களுடைய படகுகள் நாசமாய் போவதை கண்டுகொள்ளாமல் இலங்கை கடற்படைக்கு அனுமதி வழங்காமல் இன்று இந்தியா படகுகளின் அட்டூழியத்தை கண்டும் காணாமல் விட்டு இருக்கின்றது .என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...

கொத்மலை
இலங்கை

திறக்கப்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை...