IMG 20220409 WA0016
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளை!

Share

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகின்ற தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளையதினம் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் நாவாந்துறை சென் நீக்கீலஸ் விளையாட்டுக் கழகமும், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றபோதே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டது.

இப் போட்டிக்கு பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளனர்.

போட்டிக்கான அனுசரணையை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் ஆகியன பொறுப்பேற்றுள்ளன.

போட்டியின் வெற்றி கிண்ணமும் இன்றையதினம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

IMG 20220409 WA0015

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...

sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...