arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

Share

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொட்டலங்களை வீச முயன்றபோது, ​​காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த, சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொட்டலங்களை சோதனையிட்ட போது, ​​22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி மின்னேற்றிகள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவாறு, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் நாளைய தினம் மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.

Share
தொடர்புடையது
sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...