தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, பதிவான மொத்த நோயாளர்களில் 52.94% அதாவது 47,136 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 18,922 நோயாளர்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.