நேற்று காலை மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், நேற்று காலை கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை எவராலும் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு இறந்தவர் இந்திய மீனவரா அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன உள்ளூர் மீனவரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.