நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு அரிசிக்கு கட்டுப்பட்டு விலை நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசி என்பன நாடளாவிய ரீதியில் பரவலாக கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய அரிசியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி அரிசி விலை தொடர்பில் அரசால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி சம்பா அரிசி ஒரு கிலோ 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், கீரி சம்பா 125 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அரிசிக்கு விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment