21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

Share

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு கட்டாயமாக்கப்பட்ட ஆங்கிலப் பரீட்சையில் தோல்வியடைந்த 7,000க்கும் மேற்பட்ட சாரதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகள் விபத்து ஒன்றை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த சாரதிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே கட்டாய ஆங்கிலப் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாரவூர்தி சாரதிகளை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்கப் பாரவூர்தித் தொழிலில் இலட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...