jeeva
செய்திகள்இலங்கை

வன்முறைகளுக்கு இடமில்லை! – எச்சரிக்கிறார் வடக்கு ஆளுநர்

Share

வடக்கு மாகாணம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன் என்று அம்மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் முதன்முறையாக அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய காணொளி நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனது பதவிக்காலத்தில் வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களுக்கு – கத்திவெட்டுச் சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. ஆட்களின் கை, கால் வெட்டுவதற்கு இடமில்லை.

இந்த அடாவடிகளில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பேன். வடக்கு மாகாணம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன்

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவேன்.

பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அதற்கான தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவேன். இதற்குத் தீர்வு காண இலங்கை மீன்பிடி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் நான் பேசுவது மட்டுமன்றி அவர்களூடாக இந்திய மத்திய அரசுடனும் பேசுவேன்” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...