நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட இலங்கை வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைவாக,எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்கள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 21 ஆம் திகத, யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் மேற்படி குழுவினர், 22 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.