mp
செய்திகள்உலகம்

சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்த எம்.பி.

Share

பிரசவ வலியோடு துவிச்சகரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தையினைப் பிரசவித்துள்ளார்.

இச்சம்பவமானது நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான 41 வயதான ஜூலி அன்னே ஜெண்டருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே மருத்துவமனையிருப்பதால், அவர் தனது துவிச்சக்கரவண்டியில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்ற 10 நிமிடத்திலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளனர்.

இதனிடையே பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்றெடுத்தது குறித்து ஜூலி, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின்போது சைக்கிளை ஓட்ட உண்மையிலேயே நான் திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து முடிந்துவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்து, 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறிய ஜூலி, இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்று தனது முதல் குழந்தையை பெற்றெடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...