sajith
இலங்கைசெய்திகள்

பெருமைமிக்க சுதந்திர தினமாக அமைய வாழ்த்துகிறேன்

Share

ஒரு நாடு என்ற வகையில் சாதனைகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 75 ஆண்டுகளாக நமக்கு அனுபவத்தை வழங்குகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவர் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

குறிப்பாக இலங்கை சமீபகாலமாக அடைந்துள்ள பொருளாதார மந்தநிலை, நாட்டின் வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் பாரதூரமான நிலைமையாகும்,மேலும் முறையான முற்போக்கான வேலைத்திட்டங்கள் இன்றி அதிலிருந்து மீள்வது கடினம்.

குறுகிய இனவாதம் மற்றும் வகுப்புவாதத்தில் சிக்கிக்கொள்வது உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வழி அல்ல, உண்மையான சுதந்திரத்தை அடைய அனைவருக்கும் சம உரிமையுள்ள குடிமக்களாக நாம் ஒன்றுபட வேண்டும். அனைத்து குடிமக்களின் தேவைகளையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன், வேற்றுமையில் ஒற்றுமையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

அந்த வகையில்,ஒரு காலனித்துவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி, இந்நாட்டு மக்கள் சாதிக்க வேண்டிய பல விடயங்களும் உள்ளன.

அதற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உன்னத எதிர்பார்ப்புகளுடன் முழு நாட்டிற்கும் உறுதியான, பெருமைமிக்க சுதந்திர தினமாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...