445 6 444 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைனில் மது விற்பனை!

Share

நாட்டில் மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக அமுற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக அரசு வருமானத்தை இழந்துள்ளது.

இந்த வருமான இழப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மதுவரி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.குணசிரி விடுத்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைகளின் முன் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒன்றுகூடுபவர்களால் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு ஒன்றுகூடுபவர்களை சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.

இவற்றை கருத்தில்கொண்டு புதிய கொரோனா கொத்தணி உருவாகுவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முறை செயற்படுத்தப்படவுள்ளது.

எனவே ஊரடங்கு காலத்தில் மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்யும் பொறிமுறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது – எனத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...