பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Share

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (15.07.2023) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடும். இவ்வாறான பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று தென்மேற்கு திசையில் வீசுவதுடன், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. வீசகூடும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக இருக்கலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...