mahinda amaraweera 6756
இலங்கைசெய்திகள்

அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு யூரியா விநியோகம்!

Share

இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா அடுத்த வரமளவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

தற்போது யூரியா மூட்டையொன்றின் விலை சந்தையில் 42 ஆயிரமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உரத்தை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உரத்தை விநியோகிக்க முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...