279023188 5004809052901263 4713431897226985780 n
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களை புரிந்து கொள்கின்றோம் – எங்களை புரிந்து கொள்ளுங்கள்- ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராக தென்னிலங்கையில் இடம்பெறும் சிங்கள மக்களின் போராட்டங்களை தமிழ் மக்கள் புரிந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு, அதேவேளை, தமிழ் மக்களின் வலிகளையும் நியாயங்களையும் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, அதனால் எழுந்துள்ள போராட்டங்கள் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத்தீவு மிக அண்மைய நாட்களில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றது. தென்னிலங்கை சிங்கள மக்கள் இந்த நெருக்கடிக்கு எதிராக மாபெரும் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்.

தென்னிலங்கை மக்களின் இந்த எழுச்சியின் நியாயத்தை கடந்த காலங்களில் பேரவலத்தை சந்தித்த இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாங்கள் புரிந்து கொள்கின்றோம் உணர்ந்து கொள்கின்றோம் மதிக்கின்றோம்

இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமான தமிழ் மக்கள் மீது காலங்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய அடக்கு முறைகள் இதுவரை பாராமுகமாகவே தொடர்ந்து வருவது வேதனைக்குரியது.

இத்தருணத்தில் சிங்கள மக்கள தமிழ் மக்களாகிய எங்களது வலிகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்

உங்களை புரிந்து கொள்கின்றோம், எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக இருக்கின்றது என்பதை ஒருங்கிணைத்த தமிழர் கட்டமைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது. – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Couple Arrested
இலங்கை

மனைவியின் கனவு – போதைப்பொருள் கடத்திய கணவன்.

மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான...

Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...