மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ஆகியோர் கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் இருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் வான் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.