தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Share

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 156,400ரூபாவாக பதிவாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...