sumanthiran gota
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு? – சுமந்திரன் தகவல்

Share

அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை, சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அவர் கூட்டமைப்பின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை மறுதினம் கூடவுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுமந்திரன் எம்.பி.

” ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும்.  எனினும், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி கூடி தீர்மானம் எடுக்க வேண்டும்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தொடர்பிலான விளக்கம் தமக்கு வழங்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும்.” – என்று கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...