நெல்லின் விலை விரைவில் அதிகரிக்கிறது!
நாட்டில் நெல்லின் விலை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மேலும் தெரிவிக்கையில்,
ஒரு கிலோ நாட்டு நெல்லின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி கிலோ 50 ரூபாவாக இருந்த நாட்டு நெல்லின் கொள்வனவு விலை 55 ரூபாவாக உயரவுள்ளது.
அண்மையில் அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல்லுக்கு கொடுக்கின்ற விலையை அதிகரிக்குமாறு அரசிடம் விடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்தே நெல்லின் விலையை அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது – என்றார்.
Leave a comment