அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம் உட்பட நாட்டிலுள்ள பிரதான மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இன்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
20 ஐ நீக்கிவிட்டு, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்த, சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய வகையிலான அரசமைப்பு திருத்தம் அவசியம் எனவும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வு அல்லவெனவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment