EGG 1
இலங்கைசெய்திகள்

முட்டை விநியோகம் நிறுத்தம்!

Share

நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையால் நட்டத்தில் முட்டைகளை விநியோகிக்க முடியாது என்று சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும் பழுப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கத்துக்கும் வணிக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சில் நாளை நடைபெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...