1746080 ramadoss1
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையின் மிகப்பெரும் நம்பிக்கை துரோகம்! – இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ராமதாஸ்

Share

சீனாவின் உளவு கப்பலை நாட்டுக்குள் அனுமதித்தமை மிகப்பெரும் நம்பிக்கை துரோகம். இலங்கையின் சீனா மீதான பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு என பா.ம.க. நிறுவநர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக்கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது.

இலங்கை அரசின் இந்த செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்த பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக்கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது.

இதுதான் அதன் குணம். இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...