Tamil News large 2084034
இந்தியாஇலங்கைசெய்திகள்

நிவாரணம் வழங்குவதற்கு விசேட குழு

Share

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கு ஒரு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷவின் வழிகாட்டுதலின் கீழ் இழப்பீட்டு அலுவலகத்துடன் இணைந்ததாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசர வேலைத்திட்டமாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவின் தலைமையிலேயே விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் நபர்களின் தேவையான ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...

body
இலங்கை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம்!

நேற்று காலை மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின்...

Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...