WhatsApp Image 2022 05 23 at 2.38.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

எரிபொருள் வரிசையில் கத்திக்குத்து! – சாரதி ICU வில் அனுமதி

Share

பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பஸ் சாரதியொருவர் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ்களுக்கு எரிபொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு பஸ்கள் வரிசைகள் நின்றன. பின்னாலிருந்து பஸ்ஸொன்று முன்னால் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது, பெரும் அமைதியின்மையும், பதற்றமும் ஏற்பட்டது.

அத்துடன் வரிசையிலிருந்த பிரிதொரு தனியார் பஸ் சாரதி, முன்னால் சென்று எரிபொருளைப் பெற முயற்சித்த பஸ் சாரதியை, கத்தியினால் வெட்டியதுடன், தமது பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு கத்தியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த தனியார் பஸ் சாரதியை, பதுளைப் பொலிசார் தடைகளை மீறி 1990 அவசர அம்புலன்சில் ஏற்றி பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் பயனாக மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேரை 23-05-2022 ல் காலை கைது செய்தனர்.

வெட்டுக்காயங்களுக்குள்ளானவர் பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...

world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...