Ranil 5
இலங்கைசெய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம்!

Share

கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மண்ணெண்ணையின் விலை அதிகரிப்பை கடற்றொழிலாளர்கள் சமாளிக்கும் வகையில் நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளரின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தமது தொழில் செயற்பாடுகளுக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசல் போன்றவை தாராளமாக கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மண்ணெண்ணையின் விலையேற்றம் தொடர்பிலும் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டதுடன், ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அவை தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...