Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

Share

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், ஏரியின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் சீரற்ற காலநிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் போன்ற காரணங்களினால் பாதுகாப்பு கருதி கிரிகோரி ஏரியில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இந்த நிலையில், நுவரெலியா – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் தொப்பஸ் முதல் லபுகலை வரையிலான பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், அந்த வீதிகளில் பயணிக்கும் போது வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...