நடு வீதியில் அடிதடியில் நாடாளுமன்ற உறுப்பினர் - பாடசாலை அதிபர்
இலங்கைசெய்திகள்

நடு வீதியில் அடிதடியில் நாடாளுமன்ற உறுப்பினர் – பாடசாலை அதிபர்

Share

நடு வீதியில் அடிதடியில் நாடாளுமன்ற உறுப்பினர் – பாடசாலை அதிபர்

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் மத்துகம பாடசாலை அதிபர் ஒருவருக்கும் இடையில் கடும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. காணி பிரச்சினையின் அடிப்படையில் நேற்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மத்துகம நகரில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிபர் இருவரும் தாக்கப்பட்டதாக மத்துகம பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு சொந்தமான காணியொன்று மத்துகம நகரின் மத்தியில் அமைந்துள்ளதுடன் அதனை அண்டிய காணி களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவருக்குச் சொந்தமானதாகும்.

குறித்த காணியில் முற்கம்பி வேலி அமைப்பதற்காக அதிபர் மற்றுமொரு குழுவினருடன் நேற்று காலை சென்றுள்ளார்.

இதன் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் வந்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன் மோதலாக மாறியதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முரண்பாடு தொடர்பில் இரு தரப்பிலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மத்துகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், காணி சர்ச்சை தொடர்பான வழக்கை களுத்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...