Murder
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த கணவன் பொலிஸில் சரணடைவு!

Share

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மகிழடித்தீவு – காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு – காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் – மனைவி இடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

சம்பவ தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்துவிட்டு தனது இரண்டரை வயதுக் குழந்தையைத் தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டுக்குக் கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் நண்பகல் 12 மணியளவில் சரணடைந்த கணவனைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனார்.

கைதான 30 வயதுடைய நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் கூறினர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீது பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...