image 8854364583
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் காணிகள் விடுவிப்பு!!

Share

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி. வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி – அந்தனிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா்.

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கா் / தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கா்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கா்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கா், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாக  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி  மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளார்.

நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா,  பாராளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன்,  பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினர், பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...