இந்தியாஇலங்கைசெய்திகள்

4900 பக்தர்களுடன் கச்சதீவு திருவிழா ஆரம்பம்

kachchtiv 2
Share

கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை 4 மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.

நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இம்முறை வருடாந்த கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை , இந்திய துணை தூதுவராலயம், இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

இன்று (04) காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடவுள்ளது.

இதன் பொழுது 60 நாட்டு படகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2,100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 உம் அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5,100 பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...