IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

Share

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியின் பூதவுடலுக்கு, அவர் இன்று (டிசம்பர் 3) பெறவிருந்த பட்டச் சான்றிதழ், கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது.

மக்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகித் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெறவிருந்த பட்டச் சான்றிதழ் அவருடைய பூதவுடலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.

25 69302a6375a42

தலைமை விமானியான 41 வயதான குரூப் கேப்டன் நிர்மல சியம்பலாபிட்டிய, 3,000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணம் செய்த அனுபவம் வாய்ந்த விமானி என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த விமானியின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (டிசம்பர் 4, 2025) முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெறவுள்ளன.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...