25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

Share

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நடவடிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

“2020 ஆம் ஆண்டு இதேபோன்ற புயல் இலங்கையைத் தாக்கியது. அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தற்போதைய அரசாங்கம் மீள ஆய்வு செய்ய வேண்டும்,” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோன்ற புயல் இலங்கையைத் தாக்கும் என அறிவிக்கப்பட்ட போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராக இருந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் தனது பேரிடர் முகாமைத்துவ அணுகுமுறையை மேம்படுத்த முந்தைய நிர்வாகத்தின் அனுபவங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவின் கருத்தாக உள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...