Jeevan Thiyakaraja
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

சிவாஜிலிங்கத்தின் கருத்துக்கு ஜீவன் தியாகராஜா பதிலடி!

Share

பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ,

” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது.

அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” என தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

ஆளுநரின் ஊழியர்கள் , மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார்.

இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...