1635812679 weather rain new 2 1
இலங்கைசெய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை

Share

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதால், இன்று (31) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...