WhatsApp Image 2022 04 17 at 2.26.38 PM 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்றும் போராட்டங்கள்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கும் கடும் கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டன. அரச பயங்கரவாதம் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது என மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் 12 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்து நாட்டில் பல பகுதிகளில் இன்று போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஹர்தாலுக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதனை ஏற்று பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன. இதனால் இயல்பு நிலை ஸ்தம்பிக்கப்பட்டது.

மலையகத்தில் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் இடம்பெற்றதால் பெரும் பதற்ற நிலையும் ஏற்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு ,பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...