நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளில் 88% பேர் டெங்கு 2 வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த, டெங்கு 2 வைரஸ் வகைக்கு எதிரான மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் உள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர குறிப்பிட்ட அவர் இந்த ஆண்டு நாட்டில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.