jeyshankar
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

Share

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். 30 ஆம் திகதிவரை அவர் நாட்டில் தங்கியிருப்பார்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு கடைசியாக 2018 இல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வருகின்றார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளார்.’பிம்ஸ்டெக்’ அமைப்பின் அடுத்த தலைமைப்பொறுப்பை தாய்லாந்தே ஏற்கவுள்ளது. அந்த பதவியை தாய்லாந்து பிரதமர் பொறுப்பேற்பார். ஏனைய நாடுகளின் பிரதமர்கள் ‘காணொளி’ தொழில்நுட்பம் ஊடாகவே மாநாட்டில் பங்கேற்பார்கள்.

அரச தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

அத்துடன், ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு – கலந்துரையாடல் மார்ச் 29 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் மண்டபத்தில் நடைபெறும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...