Tissa Vitharana
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி இல்லையெனில் பொதுத்தேர்தல்!

Share

அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வாரம் முக்கிய பேச்சுகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தை தோற்கடிக்க பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்பஷில் ராஜபக்சவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் செயற்பாட்டில் உள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள். மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினருக்கு எதிர்வரும் நாட்களில் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தை முன்னேற்றகரமாக இடம்பெற்ற நிலையில் தான் 38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தற்போது பாராளுமன்றத்தின் ஊடாக தேசிய சபையை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது என்ற சிக்கல் காணப்படுகிறது. பாராளுமன்ற நிர்வாகத்தினால் மாத்திரம் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.” – எனவும் அவர் கூறினார்.

#SriLanlaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...

death body
இலங்கை

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல யாரும் முன்வராத பரிதாபம் – விபத்தில் உயிரிழந்த முதியவர்.

நேற்றைய தினம் இரவு காரைநகரில் இடம்பெற்ற விபத்தில், காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66...