imf
இலங்கைசெய்திகள்

IMF இடமிருந்து டிசம்பரில் நிதி!!

Share

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு இடம்பெற்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவழங்கல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடன் வழங்கும் காலத்திட்டம் உடன்படிக்கைக்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிதியம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான நிதிகளை பெற முடியும்.

வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நிதி தொடர்பாக உறுதிப்படுத்தி எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதக் காலப்பகுதியினுள் சகல விடயங்களிலும் அவர்களது ஒத்துழைப்பு இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்குமாயின் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கான நிதி வழங்கல் ஆரம்பமாகும்.

வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடன் உத்தியோகப்பூர்வமான தொடர்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்துக்கு பின்னரே வெளிநாட்டு கடனளிப்பாளர்களை தொடர்பு கொள்ள முடியும் என மேலும் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கடனளிப்பாளர்களுடனான உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...