சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல், குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெறும் என ஹட்டன் வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.