அண்மைக்காலங்களாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் உருவாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகள் இதனை கண்டித்து எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, தனது புகைப்படங்களை வைத்து AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு எதிராக நடிகை மிருணாள் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை மிருணாள் தாகூர், தனது உருவம் அல்லது அடையாளத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்குவதும், பகிர்வதும் சட்டவிரோதமானது எனவும், தனது பெயர், புகைப்படம் அல்லது உருவத்தை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எனது அடையாளத்தை தொடர்ந்து தவறாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிருணாள் தாகூர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.