ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

பொன்சேகா – ஹரின் மோதல்!

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளமையானது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இருவரும் பொதுவெளியில் மோதிக்கொண்டனர்.

மே தினத்துக்கான ஏற்பாடுகளை ஹரின் பெர்ணான்டோவே மேற்கொண்டிருந்தார். பேச்சாளர்களுக்கான பெயர் பட்டியலில் பொன்சேகாவின் பெயர் இருக்கவில்லை. இது தொடர்பில் ஹரினை அழைத்து, பொன்சேகா வினவியபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது சிறு மோதலாக மாறியது.

இருவரும் சபை நாகரீகம்மறந்து, கடும் வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனுச நாணயக்கார ஆகியோர் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...